ஐ.தே.க.வில் இருந்து இடைநீக்கம் – சஜித் தரப்பு தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

239 0

சிறிலங்காவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிராகரித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இடைக்கால தடைகோரி இவ்வாறு  மனு  தாக்கல் செய்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்த 99 பேரை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்க அந்த கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.