யாழில் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

268 0

யாழ். மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ். மாநகர சபை சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், வியாபார நிலையங்களில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.

டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக பிரதேச மட்டக் குழுவினுடைய செயற்பாடுகள், கிராமிய சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு சுகாதார குழுவினரால், வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யப்பட்டது.

கிராம மட்ட செயற்பாட்டு குழுவில் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை கிராமமாக மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவ்வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும்போது எதிர்நோக்குகின்ற இடர்பாடுகளை களைவதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

வெற்றுகாணிகளில் அந்த காணிச் சொந்தக்காரர்கள் அந்தக் காணியை முறைப்படி பற்றைகளை வெட்டி அகற்றி அதற்கு மேலாக அங்கு காணப்படுகின்ற கொள்கலன்கள், சிரட்டை பிளாஸ்டிக் கொள்கலன் போன்றவற்றை அகற்றுவது பிரதானமானதாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று வீடுகளிலும் நீர் வழிந்தோடும் பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

தற்பொழுது கொரோனாவுக்கு இணையாக இந்த டெங்கு பரவலும் நாட்டில் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.