அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மனைவி மெலானியாவுக்கு ஆடை வடிவமைக்க பிரான்ஸ் நிபுணர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப் மனைவியான மெலானியா (45) முன்னாள் மொடல் அழகி ஆவார். இவர் மிச்செல் ஒபாமாவுக்கு அடுத்தப்படியாக அமெரிக்காவின் முதல் பெண்மணி ஆக இருக்கிறார்.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளருமான ஷோபி தெலாட் (52) மெலானியாவுக்கு ஆடை வடிவமைத்து தர முடியாது என்று கூறியுள்ளார்.
இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர், மிச்செல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டனுக்கு எல்லாம் ஆடை தயாரித்து வழங்கியுள்ளார்.
ஆனால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலானியாவுக்கு ஆடை வடிவமைத்து தர மறுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது மற்ற நிபுணர்களும் அவருக்கு ஆடை தயாரித்து கொடுக்க கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் இனவெறி, பாலியல் பிரச்சினை, வெளிநாட்டினர் மீதான எதிர்ப்பு போன்ற கொள்கைகளை கொண்டிருந்தார்.
ஒருவருக்கு ஆடை தயாரித்து கொடுப்பது அவரது தனிப்பட்ட உரிமை. என்னை பொறுத்தவரை நான் டிரம்ப் மனைவி மெலானியாவுக்கு ஆடை தயாரித்து வழங்கமாட்டேன். என்னை பொறுத்தவரை எனக்கு பணம் முக்கியமல்ல என அதிரடியாக தெரிவித்துள்ளார்.