சிறிலங்காவில் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி நடைபெறலாம் என தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இதன் காரணமாக ஓகஸ்ட் 07 ஆம் திகதி நடைபெறவிருக்கும் 2020 க.பொ.த. உயர்தர பரீட்சையில் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறியுள்ளார்.
இதவேளை நாடாளுமன்றம் இல்லாமல் ஒரு நாடு செயற்பட முடியாதுஎன தெரிவித்த ஹெகலிய ரம்புக்வெல எனவே அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடைபெறும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்னர்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கருத்துக்கள் வெளியாவதாகவும் கூறினார்.