சிறிலங்காவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களின் கூட்டம் உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது.
கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தேசிய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக கூட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து கூட்டம் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தலைவர் ரணில் விக்ரமசிங்க தெளிவுப்படுத்தியதன் பின்னரே, இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளதுடன், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூட்டத்திலிருந்து வெளியேறியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.