உயர்தரப் பரீட்சை, புலமைப்பரிசில் தொடர்பாக நாளை தீர்மானம்

270 0

சிறிலங்காவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 8ஆம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டால் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன அதற்குப் பின்னரே நடத்த முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதனால் தேர்தல் ஆணைக்குழுவினால் பொதுத் தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்பட்டால் நாளை பரீட்சைகள் திணைக்களம் கூடி க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்தும் திகதி தொடர்பில் ஆராயம் என்று கல்வி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முன்னர் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றை நடத்தும் திகதியைத் தீர்மானிப்பதில் சிக்கல் உள்ளது என்று பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.