அவுஸ்திரேலிய அரசின் மதிப்புமிகு விருது பெறும் தமிழர்கள்

432 0

மகாராணியின் பிறந்தநாள் 2020 விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போலவே ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சாரத் தன்மையை இந்த வருட Queen’s Birthday விருது பட்டியலும் பிரதிபலிக்கிறது.

இதன்படி முன்னாள் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக தொண்டர்கள் என சுமார் 738 ஆஸ்திரேலியர்கள் Queen’s Birthday விருது பெறுவோர் பட்டியலில் இடம்பிடித்து அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை பெறுகிறார்கள். மேலும் 128 பேர் சிறப்பு விருது பெறுகிறார்கள்.

Order of Australia விருதை பெறுபவர்களில் தமிழர்களான Dr.சிதம்பரப்பிள்ளை தவசீலன், Dr.ஆறுமுகம் அழகப்பா , Ms.ஷோபா சேகர், Ms.சிவகங்கா சகாதேவன் ஆகியோரும் அடங்குகின்றனர்.

டாக்டர் சிதம்பரப்பிள்ளை தவசீலன்

ஆஸ்திரேலியாவின் NSW மாநிலத்தில் வாழும் டாக்டர் சிதம்பரப்பிள்ளை தவசீலன் தான் பணியாற்றும் மருத்துவத்துறையில் அவர் செய்யும் சேவைகளுக்காகவும், மருத்துவம் சார்ந்த கல்விகற்பித்தலுக்காகவும் OAM விருது பெறுகிறார்.

அவரின் சேவைப் பின்னணி இது:

Bridgeview Medical Practice-இன் நிறுவன இயக்குனர்; GP-ஆக பணியாற்றுகிறார்.
இலங்கையில் தன்னார்வ மருத்துவராக பலதடவைகள் பணியாற்றியுள்ளார்.

2003ம் ஆண்டு முதல் Fellowship Examination-இன் Examiner-ஆக பணியாற்றிவருகிறார்.

Western Sydney University-இன் மருத்துவத்துறையில் Senior Conjoint Lecturer – மூத்த விரிவுரையாளராக கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார்.

மருத்துவர்கள் GP-ஆக மாற பயிற்சி அளிக்கும் மருத்துவராக 2002ம் ஆண்டு முதல் பணியாற்றிவருகிறார்.

Hartley College பழைய மாணவர்கள் அமைப்பின் தலைவராக 1998முதல் 2002வரை பணியாற்றியுள்ளார்.

சிட்னி பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் செயலாளராக 1994முதல் 2000வரை பணியாற்றியுள்ளார்.

Australian Tamil Chamber of Commerce அமைப்பின் 2016ம் ஆண்டுக்கான Lifetime Achievement Award பெற்றவர்.

• NSW and ACT, Royal Australian College of General Practitioners வழங்கிய Practice of the Year விருதை அவரது நிறுவனம் 2013ம் ஆண்டு பெற்றது

டாக்டர் அழகப்பா ஆறுமுகம்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வாழும் டாக்டர் அழகப்பா ஆறுமுகம் அவர்கள், மருத்துவத்தில் குறிப்பாக மன நல மருத்துவத்தில் குறிப்பிடத்தக்க சேவை ஆற்றியமைக்காகவும் தொழில்துறை குழுக்களுக்கு அவரின் பங்களிப்பிற்காகவும் OAM விருதை பெறுகிறார்.

அவரின் சேவைப் பின்னணி இது:

Heatherton மருத்துவமனை மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் சமூக சேவைகளில் மருத்துவ சேவைகளின் இயக்குநராக 1986 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை கடமையாற்றியவர்,

Larundel மன நல மருத்துவமனையில் துணை மன நல மருத்துவ கண்காணிப்பாளராக 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரையும், மன நல மருத்துவ ஆலோசகராக 1972 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரையும் கடமையாற்றியவர்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மன நல மருத்துவர்கள் கல்லூரியின் விக்டோரிய மாநில கிளைக் குழு உறுப்பினர், 1981-1986 மற்றும் முன்னாள் தேர்வாளர்.

அரசு ஊழியர் மன நல மருத்துவர்கள் சங்க உறுப்பினராக 1971-1996 காலப் பகுதியிலும் தலைவராக 1988 – 1990 காலப் பகுதியிலும் கடமையாற்றியவர்.

Ms.ஷோபா சேகர்

இந்திய இசை மற்றும் நடனத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக மெல்பேர்னைச் சேர்ந்த திருமதி ஷோபா சேகர் அவர்கள் OAM விருது பெறுகிறார்.

அவரின் சேவைப் பின்னணி இது:

2017 முதல் Federation of Indian Music and Dance Victoria- இன் தலைவராக கடமையாற்றுகிறார்.
காலாக்ருதி இசைப்பள்ளியை 1999ம் ஆண்டு முதல் ஆரம்பித்து நடத்திவருகிறார். இப்பள்ளி Madras Music Academy-ஆல் அங்கீகரிக்கப்பட்டது.

இவர் Cosmic Harmony Foundation-இன் முன்னாள் Music Director ஆவார்.

Straits Times (Singapore), Sruti (India) Herald Sun (Melbourne) உள்ளிட்ட பல பத்திரிகைகளில் Freelance arts columnist-ஆக எழுதிவருகிறார்.

Melbourne Polytechnic-இல் 2007-2019 வரை Performing & Creative Arts Sessions Lecturer-ஆக பணிபுரிந்த இவர் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார்.

2007ம் ஆண்டு Multicultural Award of Excellence, Premier of Victoria விருதுபெற்ற திருமதி ஷோபா சேகர் இந்தியாவின் Sur Mani விருதையும் பெற்றிருக்கிறார்.

Ms.சிவகங்கா சஹாதேவன்

மெல்பேர்னில் வாழும் திருமதி சிவகங்கா சஹாதேவன் அவர்கள், இசைப் பணிக்காக OAM விருது பெறுகிறார்.

அவரின் சேவைப் பின்னணி இது:

1996ம் ஆண்டிலிருந்து கர்நாடக இசை (வாய்ப்பாட்டு) மற்றும் வீணை இசை என்பவற்றைக் கற்றுக் கொடுத்து வருகிறார்

The Taste of India என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார்

The Taste of India இசை நிகழ்ச்சிகளிலிருந்து கிடைக்கும் தொகை மூலம், குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் அமைப்பான Starlight Children’s Foundation என்ற அமைப்பிற்கு நிதி உதவியும் ஆதரவும் வழங்கி வருகிறார்.

2017ம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக “பாலம்” என்ற இசை நிகழ்ச்சிகளை நடத்தி, அதிலிருந்து கிடைக்கும் தொகையை Girls from Oz (g-oz) என்ற அமைப்பிற்கு வழங்கி வருகிறார்