தெல்லிப்பழையில் திடீர் சோதனை!- ஆவா குழுவின் வாள்கள் மீட்பு

312 0

யாழில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆவா குழு உறுப்பினர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையின்போது அபாயகரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இராணுவப் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.