சிறிலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தேர்தலில் வாக்களிக்க வழியேற்படுத்த வேண்டும் – பெப்ரல்

297 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் மருத்துவமனைகளில் கிகிச்சை பெறுபவர்களும் தேர்தலில் வாக்களிப்பதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்தவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று முன்வைக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக இலங்கைக்கு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 5000 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்