அனைத்து அரச பாடசாலை மாணவர்களினதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, இது வரையில் பயனைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்காமலிருக்கும் , பயனைப் பெற எதிர்பார்த்துள்ளவர்கள் பிழைகளின்றி பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்களை உரிய வலய கல்வி அலுவலகத்தில் அல்லது கல்வி அமைச்சில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பிரிவினை 011-2784163, 011-2784872 மற்றும் 011-3641555 என்ற இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது