சிறிலங்காவின் பூசா சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சிறைச்சாலை நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.
பாதுகாப்பு செயலாளர், பதில் பொலிஸ்மா அதிபர், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஆகியோர் நேற்று (சனிக்கிழமை) சிறைச்சாலைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஏனைய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள் உட்பட கடுமையான குற்றவாளிகளை பூசா சிறைக்கு மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறைச்சாலையில் சி.சி.ரி.வி.கமரா வலையமைப்பை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.