சிறிலங்காவில் இதுவரையில் 75,239 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

265 0

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் பி.சி.ஆர் பரிசோதனைகள் தற்போது 75,239 வரையில் சிறிலங்காவில்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 1243 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 814 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக 912 பேர் வரையில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பதோடு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 பேராக பதிவாகியுள்ளது.

அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.