சிறிலங்காவில் ஹுலின் தனிப்பட்டக் கருத்துக்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது- பிமல்

270 0

சிறிலங்காவில் பேராசிரியர் ஹுல் தெரிவித்துள்ள தனிப்பட்டக் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், இன்றைய நிலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு மீது சேறுபூச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது என்பதையும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பிமல் ரத்நாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனத்தன்மையுடன் செயற்படவில்லை என்று கூறவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது.

இதனால், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அல்லது பேராசிரியர் ஹுலில் ஏதாவது ஒரு குறையை, உயர்த்திப் பிடிக்கவே ஆளும் தரப்பு முயற்சி செய்து வருகிறது.

இந்த செயற்பாட்டை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனத்தன்மையுடன் செயற்படுமானால், அது ஜனநாயகத்தை பாதுகாக்கும் வழிவகை என்பதே எமது நோக்கமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.