மங்களாராமய தேரரை இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

307 0

ampitiye_sumanarathana-1-673x379மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரரை வேறு ஒரு விகாரைக்கு இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் ஏ.எம்.எம். தௌபீக் மற்றும் செயலாளர் ஏல்.எல்.எம். சபீல் நழீமி ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு நேற்று அவரச கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.