போலி நாணயத்தாள்களை அச்சடித்த 13 வயது சிறுமி

317 0

fee22_15243இந்தியாவில் 500 ரூபாய் 1000 ரூபாய் பணப்புழக்கம் தொடர்பில் இந்தியப் பிரதமர் கொண்டுவந்த சட்டம் இந்திய நாட்டையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆங்காங்கே பல்வேறு குற்றச் செயல்களும் தொடர்கின்றது.

இந்த நிலையில் கேரள மாநிலம் திரிச்சூரில் 13வயதான சிறுமி ஒருவர் போலி 2000 ரூபாய்நாணயத்தாள்களை அச்சடித்து கடையில் பொருட்களை வாங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

குறித்த சிறுமி வீட்டில் பயன்படுத்தும் ஸ்கேனர் மூலம் அசல் 2000 ரூபாயினை ஸ்கேன் செய்து கலர் பிரிண்டர் மூலம் போலி 2000 ரூபாயினை அச்சடித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

போலி நாணயத்தாளினை கடையில் கொடுத்து 500 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி, மீதி 1500 ரூபாய் சில்லறை கேட்டுள்ளார்.

இதேவேளை குறித்த கடைக்காரர் பிரிதொரு கடையில் நாணயத்தாளை கொடுத்த நிலையிலேயே அதுபோலி நாணயத்தாள் என தெரிய வந்துள்ளது.

பின்னர் சிறுமி மீது பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாடையடுத்து சிறுமியை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.