நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு, PCR பரிசோதனையை கட்டணமின்றி அந்நாட்டிலேயே மேற்கொள்வதற்கு லெபனான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மீண்டும் தாய்நாட்டுக்கு வருகைதர எதிர்பார்த்துள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், லெபனான் வெளிவிவகார அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளில் இருந்து மீண்டும் நாட்டுக்கு வருகைதரும் இலங்கையர்களுக்கு அந்நாடுகளிலேயே PCR பரிசோதனை மேற்கொண்ட பின்னர் நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.