நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசு அதிகரிப்பு

273 0

தேவை அதிகரித்து இருப்பதால் நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் நாமக்கள் மாவட்டத்தில் இருந்து கோடிகணக்கான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்குதான் முட்டைகளின் தேவைக்கேற்ப கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கேரள மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கேரளாவுக்கு அதிக அளவு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இன்று ஒரே நாளில் முட்டையின் கொள்முதல் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.4.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.