பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்குகிறது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்குகிறது.
நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 581 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.73 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது..