கடந்த வருடம் கல்விக்காக ஒதுக்கிய நிதியை முழுமையாக செலவழிக்காது மீதப்படுத்திய குற்றத்துக்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று நாடாளுமன்றில் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இதனை தெரிவித்தார்.
வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி கடந்த வருடத்தைக் காட்டிலும் குறைவடைந்தமை தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்பை இந்த அரசு எந்தளவு நிராகரித்துள்ளது என்பதற்கு தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தெளிவாக காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.