வழமையான நேர அட்டவணையில் புகையிரத சேவை

341 0

வழமையான நேர அட்டவணையின் பிரகாரம் நாளை மறுதினம் முதல் அனைத்து புகையிரதங்களும் சேவையில் ஈடுப்படுத்தப்படும்,

நேர அட்டவணையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே புகையிரத சேவையின் நேரம் தொடர்பில் பயணிகள் கவனம் கொள்ள வேண்டும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பிரனாந்து தெரிவித்தார்.

நாளைமறுதினம் முதல் அனைத்து புகையிரத சேவையும் வழமை நிலைக்கு திரும்பும் இதனடிப்படையில் அலுவலக புகையிரதம், தபால் சேவை புகையிரதம், கடுகதி மற்றும் தூர பிரதேச புகையிரதம் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும் .

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி செல்லும் சீக்ரகாமி புகையிரதம் ,மற்றும் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி செல்லும் தெதுனு மெனிகே புகையிரதம் ஆகியவை நாளைமறுதினம் போக்குவரத்து சேவையில் ஈடுபடாது.
புகையிரத போக்குவரத்து சேவை வழமை நிலைக்கு திரும்பினாலும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையாக பின்பற்றப்படும். என்றார்.