காணாமற்போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை விரைவில் அரசாங்கத்திடம்

451 0

maxwell_1-450x262போரின் போது காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட  உள்ளது. இதே வேளை , காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக  அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கான பூர்வாங்கல் நடடிவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டார்.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பில் கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் இன்னும் பூர்த்தியடையாத போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். காணாமற்போனோர் தொடர்பில் மேலும் 6000 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகைளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தரப்புகளினால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் அடுத்த கட்டம் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக ஆணைக்குழு பரிந்துரை செய்யவுள்ளதுடன், சட்டநடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு அமைவாக பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்படுவதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment