சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 810 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளான மேலும் 3 பேர் இன்று (சனிக்கிழமை) அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மூவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 891 பேர் குணமடைந்துள்ளனர் என்பதோடு, தொற்றுக்குள்ளான 902 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, கொரோனா தொற்றினால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.