இரணைமடுவிலிருந்து கடற்படையினர் வெளியேற்றம்!

267 0

கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு 70 கடற்படையினர் இன்று (06) வெளியேறியுள்ளனர்.

வெலிசறை கடற்படை முகாமிலிருந்த 167 கடற்படையினர், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடந்த மே 20 ஆம் திகதியன்று கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமுக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்டனர்.

தற்போது இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். (PCR) பரிசோதனை மூலம் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 70 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று வெளியேறியுள்ளார்கள்.

எஞ்சியுள்ள 97 கடற்படையினரின் பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன எனத் தெரியவருகின்றது.