ஜீவன் தொண்டமானின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் மக்களின் பேராதரவோடு அவரை நாடாளுமன்ற ஆசனத்தில் அமரவைப்பது உறுதியென்றும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிக்காரியதரசியும் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து, நுவரெலியா மாவட்ட வேட்பாளராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் களமிரக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நேற்று (4) வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.
இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே, மருதபாண்டி ராமேஷ்வரன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர்,
ஜீவன் தொண்டமான், வேட்பு மனுவில் கையொப்பமிட்ட மறுகணமே அவரது வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டதாகவும் மக்களும் இன்றுவரையில் பேராதரவை வழங்கி வருகின்றனர் என்றும் தெரிவித்ததோடு, அப்பேராதரவோடு, நாடாளுமன்ற ஆசனத்தில் அவரை அமரவைப்பதாகவும் ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் இடத்தை, தற்போது ஜீவன் தொண்டமான் நிரப்பியுள்ளார் என்றும் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கிய அதே ஆதரவை, மக்கள் ஜீவன் தொண்டமானுக்கு தற்போது வழங்கி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர் தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்தாலும், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்துக்குச் செல்வார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.