கொழும்பு மெனிங் சந்தை நாளை (07) முதல் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமைகளில் திறப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொவிட் 19 பரவலையடுத்து மூடப்பட்டிருந்த மெனிங் சந்தை சில நிபந்தனைகளுக்கு மத்தியில் மீண்டும் திறக்கப்படடுள்ளது.
இதற்கமைய, கிருமி தொற்று நீக்கம் செய்வதற்காக பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் மெனிங் சந்தை மூடப்பட்டது.
எனினும், நாளை முதல் இனிவரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணிவரை மெனிங் சந்தையை வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.