சிறிலங்காவில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

307 0

சிறிலங்கா-பதுளை – மடுல்சீமை -கிரண்டி எல்ல ஆற்றுக்கு அருகில் உள்ள நீர்குழியில் விழுந்து மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் தந்தை (38), மகள்(12), மற்றொரு சிறுமி (13 ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் நீராட சென்றபோதே மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.