சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநீக்கம் சட்டத்திற்கமைய நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச்மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் நாடளாவிய ரீதியில்ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்ததுடன், கடந்த மே மாதம் 11ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு குறிப்பிட்ட காலப் பகுதிக்கு மாத்திரம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக நேற்று வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை 230 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், 96 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
அதற்கமைய ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 70 ஆயிரத்து 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், இவர்களிடமிருந்து 19 ஆயிரத்து 952 வாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.