தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவு நாள் யூன் 5 – Germany,Berlin

665 0

தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே ஈகம் செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவு நாளாகிய யூன் 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து யூன் 6 ஆம் நாள் தியாகி பொன். சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்படுகின்றது. அந்தவகையில் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 46 ஆவது ஆண்டை நினைவுகூரும் முகமாக பேர்லினில் Freie Universität பல்கலைக்கழகத்தின் முன்பாக அமைந்துள்ள மாணவர் நினைவுத் தூபியின் வளாகத்தில் சுடர்வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.