சிறிலங்காவில் பொதுத்தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பதை பரீட்சிக்கும் முயற்சியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இதற்கென தெரிவுசெய்யப்பட்ட 200 வாக்காளர்களை கொண்ட பரிட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது வாக்காளர்கள் செயற்படும் விதம், அவர்களின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அதற்கு அமைவான விடயங்களை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர்கள் கட்டாயம் முககவசம் பயன்படுத்த வேண்டும் என்பதினால், எவ்வாறு வாக்காளர்களை உறுதிப்படுத்துவது என்பது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.