தொல்பொருள் திணைக்களத்தினால் புறக்கணிக்கப்படும் மந்திரிமனை

279 0

பேணிப் பாதுகாக்க வேண்டிய வராற்றுப் பொக்கிசமான நல்லூர் சங்கிலியன் மந்திரி மனையானது தொல்பொருள் திணைக்களத்தினால் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது காணப்படுகிறதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நல்லூர் சங்கிலியன் மந்திரி மனையின் பழமையினை பாதுகாப்பதற்கு மத்திய அரசின் கீழ் செயற்படும் தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மந்திரிமனை அமைந்துள்ள இடத்திற்கு ஒரு காவலாளி கூட கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை.

எப்போதும் திறந்தே காணப்படுவதன் காரணமாக எந்தவித அனுமதியுமின்றி புகைப்பட படப்பிடிப்பாளர்கள், மதுப்பிரியர்கள், சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் என பல தரப்பினரும் அந்த இடத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.