யாழ்ப்பாணம்- அச்சுவேலி, பத்தைமேனி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் 450 மில்லிக்கிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.