திருப்பூரில், பெண்ணை தோசை கல்லால் தாக்கி, கொடூரமாக கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், மைசூர், தரசிபுரா பகுதியை சேர்ந்தவர் லட்சுமி, 49. கணவர் இறந்த பின், திருப்பூர், பி.என்., ரோடு அருகே அண்ணா நகரில் தங்கி, கட்டட வேலை பார்த்து வந்தார். மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, வெளியூரில் வசிக்கின்றனர். இவரது வீடு அருகே வசித்து வருபவர் சுரேஷ்; இவரது மகன் பூபதி, 22. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, லட்சுமியின், வீட்டுக்குள் அத்துமீறி பூபதி நுழைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த லட்சுமி சத்தம் போடவே, ஆவேசம் அடைந்த பூபதி, தோசைக் கல்லை எடுத்து லட்சுமியின் தலையில் தாக்கினார். இதில், அவர் அதே இடத்தில் இறந்தார். திருமுருகன்பூண்டி போலீசார், பூபதியை கைது செய்து விசாரிக்கின்றனர்.