சிறீலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 10ஆயிரம் இராணுவத்தினர் அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பினடிப்படையில் தாமாக முன்வந்து இராணுவத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளனர். சிறீலங்காவின் முப்படைகளிலிருந்தும் தப்பியோடியவர்களுக்கான பொதுமன்னிப்புக்காலம் கடந்த மாதம் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் 12ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 12 ஆம் திகதிவரை இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் விரும்பினால் இராணுவத்தில் மீண்டும் இணையலாம் அல்லது விலகிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து முறைப்படி விடுமுறை பெறாமல் தப்பியோடிய 10,417 பேர் நேற்று வரை, தமது படைப்பிரிவுகளில் முன்னிலையாகி சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேலும் 15ஆயிரம் பேர் வரையானோர் இன்னமும் மறைந்துவாழ்வதாக சிறீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.