நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- புதிய செயலணி குறித்து லக்ஸ்மன் கிரியல்ல

370 0

பாதுகாப்பு செயலாளர் தலைமையில்; உருவாக்கப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணி அரசமைப்பிற்கு முரணானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது என தெரிவித்துள்ள லக்ஸ்மன் கிரியல்ல அரசசேவை என்பது பொதுச்சேவை ஆணைக்குழுவின் வரும் சுயாதீன அமைப்பு என தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் தலைமையின் கீழ் அரசசேவையை கொண்டுவருவது அரசமைப்பிற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் தளபதிகளை விட அமைச்சுகளின் செயலாளர்களிற்கு அதிக அதிகாரம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.