சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1789ஆக அதிகரிப்பு

279 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1789ஆகக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை 40 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 939 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு மேலும் 03 பேர் பூரண சுகமடைந்துள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 839 ஆக காணப்படுகின்றது.