தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், எந்தவொரு சந்தர்;ப்பத்திலும் விவாதத்துக்கு தயாராக இருப்பதாக, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்கவுடனும் இதுதொடர்பில் தொலைக்காட்சி ஊடான விவாதத்துக்குத் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி, அரசாங்கத்துக்கு செலுத்தப்பட வேண்டிய பாரிய நிதியை செலுத்தாமல் தவிர்த்து வருகிறாரென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க அண்மையில் தெரிவித்துள்ள கருத்துக்கே, நிஷங்க சேனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.