மொரட்டுவை, சொய்சாபுர பகுதியில் ஹோட்டல் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்கிசை நீதவான் நீதிமன்றம் இதற்கான அனுமதியை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது.
26 மற்றும் 36 வயதுடைய குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.