மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை திறப்பு!

291 0

download-4-3தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாமனிதருமான நடாராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது சிலை இன்று சாவகச்சேரி பிரதேச சபைக் கட்டத்திற்கு முன்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் கொழும்பு நரகேன் பிட்டியில் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி இனந்தெரியாத நபர்களினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்நாளை நினைவுகூரும் முகமாக சர்வமத வழிபாட்டுடன் இன்று அவரது சிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண, நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.

மாமனிதர் ரவிராஜின் சிலைக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மலர்மாலை அணிவித்ததுடன், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் விளக்கேற்றினர்.

இதன்பின், பொன்விழா மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.