தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு

293 0

பொதுத் தேர்தலில் சுகாதார சேவை ஊழியர்கள் அனைவருக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சகல அரச சுகாதார சேவை ஊழியர்களும் ஜூன் மாதம் 10 ஆ‌ம் திகதிக்கு முன் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.