ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சென்ற சகலரும், மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்வதற்கான, கதவு திறந்திருப்பதாக, காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எமது கட்சியின் யாப்பில் அன்று இருந்த காரணங்களே இன்றும் உள்ளன. எனவே எமது கட்சியின் உறுப்பினர்கள் வேறு அரசியல் கட்சிகளை பலப்படுத்தவோ அல்லது அவ்வாறானதொரு கட்சியில் உறுப்புரிமையை பெற வாய்ப்பில்லை என்றார்.