மட்டக்களப்பு – ஐயங்கேணி, ஜின்னா வீதி பகுதியில் தனது மனைவியை (24-வயது) நபர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
நேற்று (03) இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஐயங்கேணிக் கிராமத்தில் வசித்து வந்த அப்துல் காதர் ஷியாமியா (24-வயது) என்ற இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 9 தினங்களுக்கு முன்னரே, திருமணம் முடித்து விவாகரத்து செய்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபராக அந்தப் பெண்ணின் கணவர் நவாஸ் முஹம்மத் ஷபீக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – ஊறுகொடவத்தயை பிறப்பிடமாகக் கொண்ட சந்தேக நபர் ஏறாவூரில் ஏற்கெனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து ஒரு குழந்தைக்குத் தந்தையாகிய நிலையில் அப்பெண்ணை விவாகரத்துச் செய்து கடந்த 9 தினங்களுக்கு முன்னர் தற்போது கொலை செய்யப்பட்ட பெண்ணைத் திருமணம் முடித்தார் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பெண் தாக்கப்பட்டு வயர் மூலம் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.