அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அருகே மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்துள்ளனர். அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டதால், கருப்பின மக்கள் நீதி கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். உயர் பாதுகாப்பு கொண்ட வெள்ளை மாளிகை அருகேயும் தினமும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டங்களில் கடும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க முடியாமல் போலீசார் திணறிவருகின்றனர்.
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் அருகே உள்ள காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது. காந்தி சிலையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.