போலி கல்விச் சான்றிதழ்களை சமர்பித்து 24 வருடங்கள் அரச பணியில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவர் பதுளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
59 வயதான குறித் பெண் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
தொழிநுட்ப சேவை உத்தியோகஸ்தராக, ஊவா மாகாண பிரதி பிரதம செயலாளர் அலுவலகத்தில் இவர் பணிபுரிந்துவந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
சேவை நிறந்தரமாக்குதன் பொருட்டு, தகுதி சோதனை செய்யப்பட்ட வேளையிலேயே, அவரது கல்வி சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட குறித்த பெண், பதுளை பதில் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் மாதம் இரண்டாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.