வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு எச்சரிக்கை!

255 0

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முகக் கவசம் அணியாமல் வருகை தருபவர்களை பொலிஸார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகள் மற்றும் சான்றிதழ்கள், பதிவுகள் செய்வதற்கு வரும் மக்கள் முகக் கசவம் அணிந்து கைகளை கழுவி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பொலிஸ் நிலையத்திற்கு வரும் அனைவரும் முகக் கவசங்களை கட்டாயம் அணிந்து வர வேண்டும். ஆனால் முகக் கவசம் அணியாமல் வருகை தந்த பொதுமக்கள் பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அறிவுரைகளும் வழங்கப்பட்டது.