யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தை உடைத்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மனநலம் குன்றியவர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அடைக்கல மாதா தேவாலயத்தின் மூலையில் அமைந்துள்ள மாதா சிலையின் கண்ணாடிகள் மற்றும் கைப்பகுதி என்பன இன்று (03) மதியம் அடித்து உடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.