பொதுத் தேர்தலுக்கான திகதி தேர்தல் திணைக்களத்தினால் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அவசரக் கூட்டம் ஒன்று இன்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இதில் இந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றார்கள்.
விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்., சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசியக் கட்சி, அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், மற்றும் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்திரம் கணேசமூர்த்தி தலைமையிலான கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றார்கள்.
திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் போராளி ரூபனும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்கின்றார்.
பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது உட்பட முக்கியமான அரசியல் விவகாரங்கள் இன்றைய கூட்டத்தில் ஆரபாயப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.