வெலிக்கடை முன்னாள் பொறுப்பதிகாரிக்கு பிணை!

270 0

வெலிக்கடை பொலிஸ்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பொய் சாட்சி வழங்கியமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியபோது பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுடன் தொடர்புடைய 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்து குறித்து போலியான சாட்சியை உருவாக்கியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த குற்றச்சாட்டின் பேரில் சுதத் அஸ்மடலவை கைது செய்வதற்கு பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு சட்டமா அதிபரால்,  கொழும்பு குற்றவியல் பிரிவிற்கு அறிவிக்கப்பட்டது.

கொழும்பு குற்றவியல் பிரிவு முன்வைத்த விடயங்களை பரிசீலனை செய்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் இந்த பிணை உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.