வவுனியா – காத்தார்சின்னகுளம் நாலாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை அடுத்து வீட்டிற்கு முன்பாக ஒன்றுகூடிய கிராமமக்கள் சந்தேகமடைந்த நிலையில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டின் யன்னல் வழியாக பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சடலமாக இருப்பதை அவதானித்தனர்.
இதனையடுத்து குறித்த இளைஞரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞர் கொழும்பைச் சேர்ந்தவர் என்றும் குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் என்றும் கிராமமக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தடயவியல் மற்றும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்னர்.