சிறிலங்கா கல்கிஸ்ஸ, சொய்சாபுர பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் அங்குலான மற்றும் இரத்மலானை பிரதேசத்தில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அங்குலான பிரதேசத்தை சேர்ந்த 26 மற்றும் 36 வயதுகளையுடைய குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 225 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.