சிறிலங்காவில் பொதுத் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையை இன்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.